உலகிலேயே மிகப்பிரபலமான நபர்கள் இருவதே தற்போது உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அதில் ரஷ்ய அதிபர் புட்டினுக்கு அடுத்த படியாக மஹிந்த ராஜபக்சவே இருப்பதாகவும் தெரிவிக்கிறார் குமார வெல்கம.
ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் போது நடுநிலையாக கருத்து வெளியிட்டு வந்த அவர், பெரமுனவிலிருந்து அடுத்த ஜனாதிபதியாகும் தகுதி மஹிந்த ராஜபக்சவுக்கு மாத்திரமே இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்.
சட்டங்கள் ஒருபுறமிருக்க, மஹிந்த வேட்பு மனுத் தாக்கல் செய்தால் அதனைத் தன்னால் நிராகரிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருப்பதாகவும் அதுவே மஹிந்த போட்டியிட முடியும் என்பதற்கான ஆதாரம் எனவும் அவர் வாதிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment