ஐக்கிய தேசிய முன்னணியின் இவ்வாண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் மார்ச் 5ம் திகதியளவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ள அதேவேளை தற்சமயம் இடைக்கால பட்ஜட் ஊடாக அரச செலவீனங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் ஊதியங்கள் ஈடுசெய்யப்படுகிறது.
இவ்வருட வரவு-செலவுத் திட்டம் தேர்தலுக்கு முகங்கொடுக்கவுள்ள அரசுக்கு முக்கியமானது என்பதால் பல்வேறு நிவாரணங்கள், சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடததக்கது.
No comments:
Post a Comment