பொலன்னறுவ கதுருவெலை பஸ்நிலையம் எதிரே அமைந்துள்ள பிரபல வியாபார நிலையமான கோல்ட் சிடி பென்சி ஹவுசில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கை நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டில்சான் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட வியாபார நிலையம் இது என்பதும் மின் உபகரணங்கள் கைத்தொலைபேசிகள் என விலைமதிப்புமிக்க பொருட்கள் விற்பனையாகும் வியாபார நிலையம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மின் ஒழுக்கே தீ ஏற்பட காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. பொலன்னறுவை பொலிசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
-AHM Suhail
No comments:
Post a Comment