அரசியல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக்கத் தான் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் குமார வெல்கம.
ஒக்டோபர் அரசியல் சர்ச்சைகளின் போது நடுநிலையைப் பேணிய குமார வெல்கம, மைத்ரிபாலவின் நடவடிக்கைகளை விமர்சிக்காவிட்டாலும் நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ளவர்களிடமே ஆட்சியதிகாரம் இருக்க வேண்டும் என தெரிவித்து வந்திருந்தார்.
எனினும், ஜனாதிபதி அரசியல் சட்டங்களை மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அவரை மீண்டும் வேட்பாளராக்கக் கூடாது என வெல்கம தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment