தயாசிறி 'அளந்து' பேச வேண்டும்: மஹிந்த விசனம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 January 2019

தயாசிறி 'அளந்து' பேச வேண்டும்: மஹிந்த விசனம்!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர பொறுப்புடன் அளவோடு பேச வேண்டும் என விசனம் வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.



இந்நிலையில், ஊடகங்களுக்கு இனி கருத்துக் கூறும் விடயத்தில் தான் அவதானத்துடன் இருக்கப் போவதாகவும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தான் வழங்கிய விடையின் சிறு பகுதியை மாத்திரம் ஒளிபரப்பி சர்ச்சை உருவாக்கப்படுவதாகவும் தயாசிறியும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச எந்தக் கட்சியென அவர் தெரிவிக்க வேண்டும் என தயாசிறி தெரிவித்திருந்த நிலையில் இக்கருத்து மோதல் இடம்பெற்றுள்ளமையும் ஜனாதிபதி இதனைத் தவிர்ப்பதற்கு அறிவுரை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment