புத்தளம் வனாத்தவில்லுவ பகுதியில வெடி பொருட்கள், ஆயுதங்களுடன் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் புத்தர் சிலைகளைக் குண்டு வைத்து தகர்த்து அதன் மூலம் இன வன்முறையை உருவாக்குவதே குறித்த நபர்களின் திட்டம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
மாவனல்லை பகுதியிலிருந்து கடந்த ஒருவருடத்திற்கு முன் இப்பகுதிக்கு வந்த நபரினால் குத்தகைக்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணியிலிருந்தே வெடிபொருட்கள் மற்றும் ஏனைய சாட்சியங்கள் மீட்கப்பட்டிருந்தன. 20 - 35 வயதுக்குட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் ஒளிந்திருப்பதாகக் கிடைக்கப் பெற்றிருந்த தகவலின் அடிப்படையிலேயே சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெடிபொருட்கள் மற்றும் சாதனங்கள் புத்தர் சிலைகளை குண்டு வைத்து தகர்ப்பதற்காக அங்கு சேமிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பதோடு மாவனல்லையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வேறு இடங்களிலும் இவ்வாறு புத்தர் சிலைகளை சேதப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் பிரதான சந்தேகநபர்கள் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment