கண்டி,யட்டி நுவர வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிசாம் கம்ப்ளெக்ஸ் என அறியப்படும் கட்டிடமே தீக்கிரையாகியிருந்த நிலையில் கட்டிடத்தில் மேல் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. இப்பின்னணியில் வலை கொண்டு காப்பாற்றப்பட்டிருந்தோர் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தில் தீ பரவியதற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லையாயினும் வழமைக்கு மாறாக குறித்த விவகாரம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ளதன் பின்னணியில் இது விபத்தாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment