லசந்த விக்ரமதுங்க கொலை விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி வரும் நிலையில் அவரைக் கொலை செய்ய மேலும் பலரும் காத்திருந்தாக தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.
லசந்த கொலையை முதலில் நாடாளுமன்றில் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, அதில் சரத் பொன்சேகாவுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறினார். 1995ல் சந்திரிக்காவும் லசந்தவை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் அக்காலத்திலேயே அவர் தாக்கவும் பட்டார். அக்கால கட்டத்திலேயே சநதிரிக்காவும் - மஙகளவும் தம்மைக் கொலை செய்யப் பார்ப்பதாக லசந்தவே எழுதியிருந்தார். 98ல் லசந்தவின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது.
இவ்வாறு வேறு நபர்களால் ராஜபக்ச அரசாங்கம் வருவதற்கு முன்னரே இலக்கு வைக்கப்பட்டிருந்த லசந்த, இறந்தமை தொடர்பில் பேசும் யாரும் இன்று முறையான விசாரணையை நடாத்தத் தயாரில்லையெனவும், உண்மைகளை கண்டறிவதை விடுத்து அதைக் கொண்டு அரசியல் இலாபம் அடைய முயல்வதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment