முஹம்மத் சல்மான் ரிழ்வான் எனும் பெயரில் மாளிகாவத்தை பகுதியில் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த "பப்பா" என அறியப்படும் பமுனு ஆராச்சிகே துமிந்த எனும் நபர் (28) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறித்த நபர் தொடர்பு பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிசார், கடந்த வருடம் ஓகஸ்ட் 26ம் திகதி அப்பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றதிலும் குறித்த நபரின் பங்களிப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
விசாரணையின் போது, மாளிகாவத்தை - அப்பல்வத்தை பகுதியில் கைக்குண்டொன்றை புதைத்து வைத்திருப்பது தொடர்பில் குறித்த நபர் தகவல் வெளியிட்ள்ளதுடன் அதனை தற்போது மீட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment