இராணுவத்தில் ஒருவர் இணைந்ததற்காக அவர் 'யுத்த வீரர்' ஆகி விட மாட்டார். இராணுவத்தில் இருந்தாலும் குற்றம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் ஆபத்தானவை என கூறி அவரை உடனே பதவி நீக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில.
இராணுவத்தில் உள்ள அனைவரையும் யுத்த வீரர்கள் என அழைப்பது தவறு எனும் அடிப்படையிலேயே பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ இவ்வாரம் நாலந்த கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.
இராணுவத்தில் இருந்து கொண்டு ஒரு கிராமத்திற்குள் புகுந்து கொலை செய்தவரை யுத்த வீரராக கணிப்பதில்லையென அவர் விளக்கமளித்துள்ளமையானது தமிழ் டயஸ்போரா அமைப்புகளுக்கு சாதகமான கருத்தென விமல் - கமமன்பில தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment