மாகாண சபை தேர்தல் தள்ளிப் போவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அவர்களது அமைச்சரும் தான் காரணம் என தெரிவிக்கிறார் கபீர் ஹாஷிம்.
பைசர் முஸ்தபா அமைச்சராக பதவி வகித்த போது புதிய - பழைய தேர்தல் முறைகள் பற்றிய குழப்பம் உருவாக்கப்பட்டதன் பின்னணியிலேயே தேர்தல் தள்ளிப் போவதாகவும் அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரே உருவாக்கியதாகவும் கபீர் ஹாஷிம் விளக்கமளித்துள்ளார்.
எல்லை நிர்ணய இழுபறியின் பின்னணியில் மாகாண சபை தேர்தலும் பின் போடப்பட்டு வருகின்ற அதேவேளை, நவம்பருக்குள் தேர்தலை நடாத்தாவிட்டால் தான் பதவி விலகப் போவதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment