மஹிந்த 'தற்காலிகமாக' காப்பாற்றப்பட்டுள்ளார்: துமிந்த - sonakar.com

Post Top Ad

Friday, 11 January 2019

மஹிந்த 'தற்காலிகமாக' காப்பாற்றப்பட்டுள்ளார்: துமிந்த


மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமை பெற்றதை உலகமே அறிந்துள்ள நிலையிலும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அனுதாபம் கொண்டு காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கிறார் துமிந்த திசாநாயக்க.


அக்கட்சியில் இணைந்ததாக பாரிய விளம்பரம் செய்த மஹிந்தவால் இப்போது அக்கட்சியின் உறுப்பினர் என்று கூட சொல்ல முடியாத பரிதாபகரமான நிலையே இருப்பதாகவும், அவர் தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் என தமது தரப்பு சபாநாயகருக்கு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையிலேயே இப்போது அவரால் நாடாளுமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடிகிறது எனவும் துமிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

பெரமுன உறுப்புரிமையைக் கைவிட்டதாகவும் மஹிந்த அறிவிக்காத அதேவேளை இது தொடர்பில் நீதிமன்றை நாட மேற்கொண் முயற்சிகளையும் ஆளுந்தரப்பு கூட்டணிக் கட்சிகள் கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment