விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து கைத் துப்பாக்கி மீட்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 January 2019

விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து கைத் துப்பாக்கி மீட்பு!


இன்று காலை வென்னப்புவ பகுதியில் ஆறு பேர் உயிரிழக்க நேரிட்ட வாகன விபத்து சம்பவ இடத்திலிருந்து கைத் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


விபத்துக்குள்ளான காரிலிருந்தே குறித்த துப்பாக்கியும் 9 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீன் ஏற்றி வந்த லொறியொன்றுடன் சிலாபம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் மோதியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் லொறி சாரதி உட்பட காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment