மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைப்பின் பின்னணியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய சந்தேக நபர்கள் இருவர் தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கும் நிலையில் ஏனைய எழுவருக்கு இவ்வாறு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ள அதேவேளை தலைமறைவாக உள்ளோரை சரணடையுமாறு அவர்களது தந்தை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை அண்மையில் விடுத்திருந்தார்.
இதேவேளை, குறித்த தந்தை தீவிர போக்கைக் கடைப்பிடித்ததனால் அவரை சில மாதங்களுக்கு முன் விலக்கி வைத்ததாக பிரதேசத்தின் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு தெரிவிக்கின்றமையும் குறித்த நபரின் சகோதரரும் முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் ஹஜ்ஜுல் அக்பரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment