கிரலகல புராதன தளத்துக்கள் அத்துமீறி நுழைத்து, ஏறி, படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு பரீட்சையெழுத நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
ஹொரவபத்தான பொலிசாரினால் இதன் பின்னணியில் தென்கிழக்கு பல்கலையின் இறுதியாண்டு பொறியியல் பீட மாணவர்கள் எண்மர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, அடுத்த வாரம் பரீட்சை எழுத மாணவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment