அண்ணன் தயாராகச் சொல்லியிருக்கிறார்: கோத்தா! - sonakar.com

Post Top Ad

Saturday, 26 January 2019

அண்ணன் தயாராகச் சொல்லியிருக்கிறார்: கோத்தா!


ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகும்படி தனக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் கோத்தபாய ராஜபக்சவே பெரும்பாலும் வேட்பாளராவார் என எதிர்பார்க்கவும்படுகிறது. இந்நிலையில், தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்க குடியுரிமையைக் கைவிடப் போவதாகவும் கோத்தபாய தெரிவிக்கிறார்.



இச்சூழ்நிலையிலேயே தற்போது அண்ணன் மஹிந்த ராஜபக்ச தன்னை தயாராகும்படி தெரிவித்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், கோத்தபாய தனது அமெரிக்க குடியுரிமையைக் கைவிடப் போவதில்லையெனவும் முதலீட்டாளர்களை கவர மஹிந்த தரப்பு நடாத்தும் நாடகமே இதுவெனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment