2014ம் ஆண்டு பெருந்தொகை போதைப்பொருள் வியாபாரத்தோடு தொடர்புபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்த சித்தீக் முஹமத் மகீனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
1 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 5 மில்லியன் பெறுமதியான இருவரின் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களுள் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.
2014 ஜனவரி - மே மாத காலத்திற்குள் 52 கோடி ரூபா ஹெரோயின் வியாபாரம் மூலம் பெற்றுக்கொண்டதாக குறித்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன் மூன்றரை வருடங்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்க வேண்டும் என சித்திக்கீன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா முன் வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment