மக்கள் என்னை வெல்ல வைப்பார்கள்: மஹிந்த நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Saturday, 5 January 2019

மக்கள் என்னை வெல்ல வைப்பார்கள்: மஹிந்த நம்பிக்கை!


தன் வெற்றி மக்கள் மனதிலேயே தங்கியிருப்பதாகவும் தான் மீண்டும் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.



தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களே இப்போது உருப்பெறுவதாகவும் தெரிவிக்கும் அவர் மாத்தறை - பெலியத்தை வரையிலான புகையிரத பயணப்பாதை நாளை (6) ஆரம்பிக்கப்படவுள்ளமை தனக்குக் கிடைத்த வெற்றியென தெரிவிக்கிறார்.

ஒக்டோபர் பிரளயம் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த எடுத்த முயற்சி, நீதிமன்ற தலையீட்டினால் முறியடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment