மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் இருந்து அன்மையில் வெளியாகிய கல்வி பொது தராதர பரீட்சையில் பல்கலை கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஷாமஸ்ரீ தேசமானியம் எம்.ஐ.ஜஹாப்தீன் தலைமையில் பிறைந்துரைச்சேனை முஹைதீன் தைக்கா பள்ளிவாயலில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடா கிளையின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம். இஸ்மாயில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப், பாடசாலை அதிபர்களான எம்.ஏ.சாபிர், மற்றும் யூ.எல்.எம்.ஹரீஸ், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.சாதாத், எம்.ஏ.உவைஸ் நளீமி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஏ.பி.எம்.இர்பான், இக்பால் சனசமுக நிலையத்தின் தலைவர் ஏ.எல்.எம்.லியாப்தீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறூவது இடத்தினை பெற்று மருத்து துறைக்கு தெரிவாகியுள்ள ஆப்தீன் அல்தாப் அக்ரம், உயிர் முறைகள் தொழில்நுட்ப துறைக்கு தெரிவாகியுள்ள சுபைர் பாத்திமா நஸிரா, பொறியல் தொழில் நுட்பத்திற்கு தெரிவாகியுள்ள நாஸர் முஸ்தாக் மற்றும் பாறூக் முஹம்மது அஸ்லீம் ஆகிய நான்கு மாணவர்களும் அவர்களது பெற்றோர்ளும் கலந்து கொண்டனர்.
-அனா
No comments:
Post a Comment