அக்குறணை: பிளாஸ்டிக் - பொலித்தீன் பாவனையைத் தடை செய்ய முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 January 2019

அக்குறணை: பிளாஸ்டிக் - பொலித்தீன் பாவனையைத் தடை செய்ய முஸ்தீபு



எதிர் வரும் காலங்களில் அக்குறணை பிரதேசத்தில்  பொலிதீன், பிளாஸ்டிக் பொருட்களின்  பாவனையை  முற்றாகத் தடை செய்யும் நடவடிக்கைள் மேற்கொள்ளத் திட்டமிடப்டுள்ளது. இதற்குரிய சட்ட திட்டங்களை ஏற்படுத்தி எதிர் வரும் ஜுன் மாதம் 31 ஆம் திகதி  முதல் அமுல்படுத்தப்படவுள்ளது என்று அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.



அக்குறணை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் அக்குறணை பிரதேச சபையினன் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தலைமையில் 08-1-2019 இடம்பெற்றது. இந்நிகழ்வில்  தவிசாளர்   முன் வைத்த பிரேரணைக்கு இணங்க  சகல  சபை உறுப்பினர்களின் ஆதரவுகளுடன் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அக்குறணை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அன்றாடம் பயன்படுத்தும் பொலிதீன், பிளாஸ்டிக்  பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற பிரேரணையை ஒன்றை முன் வைத்தமைக்கு இணங்க சகல உறுப்பினர்களும் ஏகமானதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானத்திற்கு கட்சி பேதமின்றி சகல  சபை உறுப்பினர்களும் ஆதரவு வழங்கி வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.  கடந்த வாரங்களில் இந்தியா சென்றிருந்தேன். அங்கே இந்த செயற் திட்டம் மிகவும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அதற்காக புதிய மாற்றீடாக அறிமுகம் செய்துள்ள உறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உறைகள் ஓரிரு நாட்களில் அழிந்து விடுகின்றன.  அவற்றை இங்கே எடுத்து வந்து பிரதேச சபை உறுப்பினர்களிடம் காட்டியது இணங்க சகல உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். எனவே  இலங்கையின் உள்ளுராட்சி மன்ற சபைகளில் இந்த வேலைத் திட்டத்தை முதலில் முறையாக முன்னெடுக்கவுள்ளது என்று அவர் தெரிவித்தார்

இதற்காகன சட்ட திட்டங்களை  ஏற்படுத்தி  வெகுவரைவில்  எதிர் வரும் ஜுன் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி


1 comment:

Unknown said...

This should be implemented island wide not only in Akurana.

Post a Comment