நாடாளுமன்றில் கடந்த நவம்பர் மாதம் மஹிந்த அணியினர் நடாத்திய களேபரம் குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாயன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சர்சசையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகர், சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அடுத்த நடவடிக்கையில் ஈடுபடுவார் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பது சட்டரீதியானது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்க சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தமையும் உச்ச நீதிமன்றம் அதனை நிராகரித்து மைத்ரியின் செயல் சட்டவிரோதம் என தீர்ப்பளித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment