வடமாகாண ஆளுனராக பதவி வகித்து ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க அண்மையில் இராஜினாமா செய்த ரெஜினோல்ட் குரே மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கிறார்.
தாம் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரே எனவும் கட்சியின் முடிவுகளுக்கேற்பவே தாம் நடந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அரசியல் காய் நகர்த்தலின் அடிப்படையில் அனைத்து மாகாணங்களுக்குமான ஆளுனர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளமையும் வட மாகாணத்துக்கு சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளதோடு அதனை முன்னாள் வடமாகாண முதல்வர் சி.விக்ணேஸ்வரன் வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும், கிழக்கில் ஹிஸ்புல்லா ஆளுனரானதற்கு எதிராக கருணா அம்மான் தரப்பு இனவாதத்தைக் கிளறி வருவது சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment