புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும்: கோட்டாபே! - sonakar.com

Post Top Ad

Monday 28 January 2019

புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும்: கோட்டாபே!


நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் கோட்டாபே ராஜபக்ச.



பெடரல் முறையில் தமிழர்களுக்கு அதீத அதிகாரங்கள் வழங்கி நாட்டைத் துண்டாட முனைவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்ற அதேவேளை ஐக்கிய இலங்கைக்குள் உரிமைப் பங்கீடுதான் என ரணில் விளக்கமளித்துள்ளார்.

எனினும், நகல் வரைபு நாட்டைத் துண்டாடும் வகையிலேயே உள்ளதாக மஹிந்தவும் தெரிவித்துள்ள நிலையில் அதனை முற்றாக நிராகரிக்க வேண்டும் என இன்று கோட்டாபே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment