புதிதாக அரபிக் கல்லூரிகள் திறக்கப்படுவதற்குத் தடை விதித்து, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களை கண்காணித்துக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரபுக் கல்லூரிகளையும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்து கண்காணிப்பது அவசியம் எனவும் ஏலவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்லூரிகளும் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அரபுக் கல்லூரிகளின் செயற்பாடு குறித்து ஏனைய சமூகங்களுக்கிடையில் சந்தேகம் நிலவி வருகின்ற நிலையில், இவற்றை ஒழுங்குபடுத்திக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுடன் முஸ்லிம்கள் தொடர்பிலான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் அரபுக்கல்லூரிகள் ஒன்றியத்தில் 217 கல்வி நிறுவனங்கள் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் 300க்குஅதிகமான நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment