தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபன்ன இடைச்சந்தியருகில் உள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் அனுமதியின்றி முஸ்லிம்களின் தொழுகை அறை இயக்கப்படுவதாகக் கூறி அங்கு சென்ற பிதேச பௌத்த துறவிகள் களேபரத்தில் ஈடுபட்ட சம்பவம் இனறு இடம்பெற்றுள்ளது.
இது குறித்து சோனகர்.கொம் செய்தியாளர் தெரிவிக்கையில், குறித்த பகுதி வழியாக கொழும்பு, அளுத்தகம மற்றும் தென் பகுதிக்கு பிரயாணம் செய்யும் முஸ்லிம்களுக்கு வசதியாக வாடகைக்கு எடுக்கப்பட்ட வர்த்தக நிலையத்தை அண்டிய பகுதியில் இவ்வாறு தொழுகை அறை ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் இதற்கு முறையான அனுமதியெதுவும் பெறவில்லையெனவும் சமூக நோக்கில் இது இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
எனினும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் இவ்வாறு அனுமதியின்றி வணக்க வழிபாட்டுதளங்களை நடாத்துவதாகக் கூறி பேரகம சுமன தேரர் ஆதரவாளர்களுடன் சென்று அவற்றை கழற்ற நிர்ப்பந்தித்திருந்த நிலையில் அங்கு ஒட்டப்பட்டிருந்த பெயர்ப் பதாதைகள் கழற்றப்பட்டு நிலைமை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தொழுகை அறை பெருமளவு பாவிக்கப்படாமல் உள்ளதாக சமூக மட்டத்தில் ஆதங்கம் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment