மல்வானை, ரக்ஸபான பகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைத்தொகுதி தீக்கிரையான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
BOI திட்டங்கள் ஊடாக பெறப்படும் கழிவுத் துணிகளைக் கொண்டு குறித்த பகுதியில் வாழும் மக்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு அதிலிருந்து உருவாகும் கழிவுத் துணிகளை எரியூட்டும் வழக்கம் இருந்து வருவதாகவும் சோனகர்.கொம் மல்வானை செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் தற்செயலாக கடைத் தொகுதி வரை தீ பரவியுள்ளதாகவும் இது இனவாத சம்பவமில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், BOI வலயமாக இருந்தும் தீயணைப்பு இயந்திரம் ஒன்றை வரவழைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், 2 கட்பீஸ் கடைகள் மற்றும் குஷன் கடை ஒன்றும் முற்றாக சேதமுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment