சுற்றுச் சூழல் பிரதியமைச்சராகப் பணியாற்றி வந்த அஜித் மன்னப்பெரும இராஜாங்க அமைச்சராக இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் இன்று முதல் அவர் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுப்புறச்சூழல் இராஜாங்க அமைச்சராக பணியாற்றவுள்ளார்.
மேலும் அமைச்சு பதவிகளை கட்சிக்காரர்களுககு வழங்கும் நிர்ப்பந்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு வழிகளில் பதவி வெற்றிடங்களை உருவாக்கி வருகின்றமையும் ஆகக்குறைந்தது மூன்று புதியவர்கள் கபினட் அந்தஸ்த்தற்ற அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment