புதிய அரசியலமைப்பு விவகாரம் தற்போது சாத்தியமற்றுப் போனாலும் எதிர்காலத்திலாவது நிறைவேறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு எனும் அடிப்படையிலேயே அனைத்து கட்சிகளும் இணக்கம் கண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
இதுபற்றி மேலும் தெரிவித்துள்ள அவர், 1950ல் ஜி.ஜி. பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த போது அதிகாரப் பகிர்வினைக் கோரினார். ஆனால் அதனை எதிர்த்த எஸ்.ஜே. செல்வநாயகம் பெடரலிசத்தை வலியுறுத்தினார். அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணி அதையே ஆதரித்திருந்த நிலையில் பின் ஆயுதப் போராட்டமும் வெடித்தது.
ஆனால், தற்போது அவ்வாறன்றி ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு எனும் அடிப்படையை அனைத்து தமிழ் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன எனவும் எவ்வாறாயினும் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றே புதிய அரசியலமைப்பு உருவாக வேண்டும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment