ஒக்டோபர் 26 முதல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளின் பின்னணியில் அவரை மனநல பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
லக்மாலி ஜயவர்தன என அறியப்படும் பெண்ணொருவரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று அம்மனு மீதான விசாரணை நடாத்த மறுத்துள்ளது நீதிமன்றம். அத்துடன் மனுதாரர் ஒரு லட்ச ரூபா சட்டச் செலவையும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு அடிப்படையற்றது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment