ஒக்டோபர் 26 அரசியல் குழப்பத்தின் பின்னணியில் அம்மாதம் 28ம் திகதி தெமட்டகொட பகுதியில் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக இடம்பெற்ற சர்ச்சை மற்றும் அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் கொழும்பு மாநகர சபையின் பெரமுன உறுப்பினர் ஜி. குலதிஸ்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.
அர்ஜுன ரணதுங்க அங்கு சென்றிருந்த வேளையில் அவரை பெரமுன ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு ஏற்பட்ட வன்முறை சூழலில் அங்கு துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டிருந்ததோடு ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அர்ஜுனவின் மெய்ப்பாதுகவலர் ஒருவர் ஏலவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment