சிறைப்படுத்தப்பட்டுள்ள ஞானசாரவை சுதந்திர தினத்தன்று விடுவிக்க முயல்வது மைத்ரிபால சிறிசேனவின் அரசியல் தந்திரம் என தெரிவிக்கிறார் மஹிந்த அணியின் ஆஸ்தான வழக்கறிஞரும் முன்னாள் மேஜருமான அஜித் பிரசன்ன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ஞானசாரவை விடுவிப்பது கோத்தபாயவின் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறிப்பதற்கான அரசியல் தந்திரம் என மேலும் தெரிவிக்கின்ற அவர், விடுதலையை ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் ஒரு தேதிக்குத் தள்ளி வைக்க வேண்டும் என தெரிவிக்கிறார்.
ஆரம்ப காலத்தில் ஞானசாரவின் வழக்குகளுக்காக உழைத்த அஜித் பிரசன்ன மஹிந்த தரப்பின் தீவிர சகாவென்பதும் தற்போது ஞானசாரவின் விடுதலையை எதிர்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment