மாவனல்லை புத்தர் சிலையுடைப்பு விவகாரம் அரசியல் ரீதியிலான பரபரப்பை உருவாக்கவில்லையாயினும் காவல் துறையையும் புலனாய்வுத் துறையையும் தட்டியெழுப்பியுள்ளது.
மாவனல்லையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அங்கு மாத்திரமன்றி பல இடங்களில் ஓசையின்றி புத்தர் சிலைகளை உடைத்து வந்துள்ளதாக தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள். குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை சந்தேக நபர்களே என்பது நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் தர்க்க ரீதியான ஆறுதல்.
அந்த ஆறுதலைக் கலைக்கும் வகையில் மிகவும் நிதானமாகவும் துல்லியமாகவும் திட்டமிட்டு இன்று புத்தளம் சென்ற விசேட பொலிஸ் பிரிவும் புலனாய்வுப் பிரிவினரும் ஒன்றிணைந்து புத்தளத்தில் 25 - 35 வயதுக்குட்பட்ட நால்வரைக் கைது செய்துள்ளனர்.
புத்தளம் பகுதியில் பிரபலமான, பழமை வாய்ந்த வர்த்தக நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான காணியை மாவனல்லை பகுதியிலிருந்து வந்து ஒரு வருட குத்தகைக்கு எடுத்த நபர்களின் ஆளுமைக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதான நால்வரும் புத்தளத்தைச் சேர்ந்த, தச்சு வேலை, பணப்பரிமாற்ற சேவை ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள்.
இந்நிலையில் மாவனல்லையில் போன்றே, ஏனையோர் மாட்டிக் கொள்ள சூத்திரதாரிகள் புத்தளத்திலிருந்தும் தலைமறைவாகியுள்ளனர்.
இலங்கைத் தீவின் முஸ்லிம் சமூகம் 1980ற்குப் பிற்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து இயக்க ஆளுமைகளுக்குட்பட்டு, இன்று பல கூறுகளாகப் பிரிந்து நிற்கிறது. இதில் எந்தக் கூறும் தாம் உருவாக்கி விதைத்த சித்தார்ந்தங்களை இன்று வரை தவறென வெளிப்படையாகக் கூறி தமது பாதையை மாற்றிக் கொள்ள முனையவில்லை. மாறாகத் தாம் இன்னும் சரியான பாதையிலேயே பயணிப்பதாக தெரிவிக்கின்றனர்.
சவுதி அரேபியா கடந்த நாற்பது வருடங்களாக பயணித்த பாதை தமது நாட்டுக்குள் கடும்போக்கு வாதத்தை உருவாக்கியிருப்பதாகக் கூறி, மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்நிலையில், அந்நாடு சார்ந்து இயங்கும் கொள்கை இயக்கங்களும் தமது போக்கை மாற்றிக் கொண்டு வருகின்றன.
இவ்வாறு வெளிநாட்டு ஆளுமை கொண்டு இலங்கையில் இஸ்லாமிய வாழ்வியலை நிர்ணயிக்க விளையும் சித்தார்ந்தங்கள், நாற்பது வருடங்களுக்கு முன் விதைத்ததை இன்று அறுவடை செய்ய ஆரம்பித்திருக்கின்றன. அதுபோலவே, இன்று விதைக்கப்படும் தீவிர சித்தார்ந்தங்களின் விளைவு எதிர்கால சமூகத்தின் இருப்புக்குக் கெடுதியாக அமையும் என்பது திண்ணம்.
இங்கு எந்த அமைப்பையும் பெயர் குறிப்பிட விரும்பவில்லையாயினும், இலங்கை முஸ்லிம் இளைஞர்களை கடும்போக்கு வாதிகளாக மாற்றும் சக்திகள் நாட்டுக்குள் ஊடுருவி விட்டன என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. இச்சக்திகள் நீண்ட காலமாக வெளிநாடுகளில் முயற்சித்துத் தோற்றுப் போன சித்தார்ந்தத்தையே இங்கு விதைக்க முற்படுகின்றன.
இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியிலும் தீவிரவாதக் குழு இருக்கிறது என்பதை நிரூபிப்பதன் மூலம் யாருக்கு நன்மை? என்ற கேள்வியே சூழ்நிலையின் விடையாக இருக்கும். இது ஒவ்வொருவர் பார்வையில் வித்தியாசப்படக் கூடும். மாவனல்லை விடயத்தில் ஆளுக்காள் அடுத்த ஜமாத் மீது சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்க, காவற்துறை துல்லியமாக இலக்குகளைக் குறி வைக்க ஆரம்பித்துள்ளது.
ஆதலால், என்றோ ஒரு நாள் உண்மைகள் முழுமையாக வெளிவரும் என்பது திண்ணம். அதுவரை முதலில் நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் இன்று வாழும் எமது சமூகத்துக்கும் எதிர்கால சந்ததியினரின் இருப்புக்கும் கேடு விளைவிக்கிறோமா இல்லையா என்பதை ஒரே உம்மத் எனும் பாசம் கொண்டவர்களாக சிந்திக்கக் கடமைப்படுகிறோம். ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகளின் போக்கு, நடவடிக்கைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்கக் கடமையுள்ளவர்களாகிறார்கள்.
இளஞ்சமுதாயத்தை போதைப் பொருள் எனும் பூதம் ஆட்கொண்டு வரும் நிலையில் அதிலிருந்து தப்பிக்க தீவிரவாத போதனைகள் பக்கம் அனுப்புவது மாற்று வழியாகாது. சிறுபான்மை சமூகமாகவும், முன்மாதிரியான முஸ்லிம்களாகவும் இந்நாட்டில் நாமும் நம் சந்ததியினரும் வாழ்வது எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும். அதன் மீதான கடமை ஒவ்வொரு தனி நபருக்கும், உலமாக்களுக்கும், அரசியல் தலைமைகளுக்கும், பிரதேச ஆளுமைகளுக்கும், ஆசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் உள்ளது.
சிந்தித்துப் பயன்பெறுவதோடு - சீரான வழியை நாடும் தேடலை மேம்படுத்த எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்!
-இர்பான் இக்பால்
பிரதம ஆசிரியர், சோனகர். கொம்

No comments:
Post a Comment