மாவனல்லை: சமூக ஆர்வலர்கள் உதவியில் குடிநீர் விநியோகம் - sonakar.com

Post Top Ad

Sunday, 6 January 2019

மாவனல்லை: சமூக ஆர்வலர்கள் உதவியில் குடிநீர் விநியோகம்


மாவனல்லைப் பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு தண்ணீரின்றி மிகவும் கஷ்டப்படும் மக்களுக்காக  பல சமூக இயக்க அமைப்புகளின் மூலம் கணிசமாளவு சிங்கள சகோதர மக்களுக்கு தண்ணீர் உதவிகள் செய்து வருகின்றனர். இந்த மனித நேய செயற்பாடுகளால் மாவனல்லைப் பிரதேச சிங்கள முஸ்லிம்களுக்கிடையே காணப்படும் இன நல்லிணக்க உறவு பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. 


தற்போது ஏற்பட்டுள்ள சிலை உடைப்பு விடயத்தில் கூட உண்மையிலேயே பௌத்த சமயத் தலைவர்கள் இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் நல்லெண்ணத்தையும் பேணி நிதானப் போக்குடன் நடந்து கொள்வது என்பது மிகவும் வரவேற்கத்தக்க அம்சமாகும். இந்த நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று தைபா சமூக அபிவித்தி நிறுவனத்தின் இயக்குனர் அஷ்ஷெய்க் எம். ஜே. ரிஸ்வான் மதனி தெரிவித்தார்.

தைபா சமூக அபிவித்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் டுபாயிலுள்ள பொறியியலாளர் முஹமட் பஷீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின்  ஜித்த விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்  ரிழ்வான் ஹனிபா அவர்களின் உதவியுடன்  5 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொது ஆழ் குழாய்க் கிணற்றின் நீர் விநியோகம்   வழங்கி வைக்கும் வைபவம்  மாவனல்லை புளுப்பிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசலில் பள்ளிவாசலின் தலைவர் நளிம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட   அஷ்ஷெய்க் எம். ஜே. ரிஸ்வான் மதனி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், 

உயிர் உள்ள அனைத்துக்கும் தண்ணீர்   மிகப்பிரதானமானதாக அத்திவசியமானதொன்றாகும். மனிதனுடைய படைப்பை எடுத்துக் கொண்டலும் என்ன தேவைகளுக்காகப் பாவனை செய்கின்றோம் என்பது எமது எல்லோருக்கும் தெரியும். தொழுகை , உணவு, குடிப்பதற்கு, சமைப்பதற்கு உள்ளிட்ட எமது ஒவ்வொருடைய அன்றாட தேவைகளுக்கெல்லாம் தண்ணீர் அவசியமாக இருந்து கொண்டிருக்கின்றது.
இப்படிப்பட்ட இந்த அருளை அல்லாஹ் நமக்குத் தந்மைக்கு நாம் அவனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனென்றல் இந்த பிரதேச மக்கள் இந்த இடத்தில் ஒரு வீடொன்றைக் கட்டிக் கொள்வதற்கும் பள்ளிவாசலைக் கட்டிக் கொள்ளும் தண்ணீரின்றி எத்தனையோ சிமரங்களை  எதிர் நோக்கியிருந்தார்கள் என்பதை இப்பிரதேச   எவரும் மறக்க மாட்டார்கள்.

ஆழ் குழாய்க் கிணறு தோன்றும் போது சுமார் நிலத்தின் கீழ் ஆற்று நீர் செல்லும் ஆழத்திற்கு 150 அல்லது 200 வரை நீரைத் தோன்றுவார்கள். அவ்வாறு தோன்றியும் நீர் கிடைக்காமல் போன சந்தர்ப்பங்கள் எங்களுக்கு உள்ளன. எனினும் பொதுவாக மலையகப் பிரதேசத்தில் ஏராளமான ஆழ் குழாய்க்கிணறுகள் நிர்மாணித்திருக்கின்றோம். அவையும் 90- 150 அடி வரையிலும் ஆழமான கிணறுகள்  நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  அல்லாஹ்த த ஆலா நிலத்திலுள்ள கற்பாறையின் இருந்து தான் எமக்கு  நீரைத் தருகின்றான்.    அதனை நாங்கள் பக்குவமாக பயன்படுத்த வேண்டும். 

குறிப்பாக மக்காவில் ஸம்ஸம் கிணற்றில் வரக் கூடிய நீரைக் கூட அதனை வீண் விரயம் செய்ய வேண்டாம் என்று விளம்பரம் செய்திருப்பார்கள். அது வற்றாத நீர் ஆகும். எனினும் அது வற்றாத நீர் என்பதற்காக அதனை வீணாகத் திறந்து பாவனை செய்யக் கூடாது. இந்த நீர் இறைவனின் அருள் பாக்கியமாகும். தண்ணீரின்றி சில இடங்களில் மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். 

மானவல்லைப் பிரதேசங்களில் நாங்கள் அதிகளவில் சிங்கள மக்கள வாழும் இடங்களில் தண்ணீர் வசதிகளைச் செய்து கொடுத்து வருகின்றோம். . இந்த பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைக்கு எம்முடைய  முன்மாதரிமிக்க  நல்லிணக்க ரீதியிலான செயற்பாடுகள் ஒரு பாதுகாப்பாக அமைந்திருக்கக் கூடும் என்று நாம் இன்று சிந்திக்கத் தோன்றுகின்றது. நாங்கள் பாடசாலைகள் தொட்டு பௌத்த விஹாரைகள் மற்றும் பொது இடங்களுக்கு சகோரத்துவத்தையும் நல்லெண்ணத்தையும் கருத்திற் கொண்டு தண்ணீர் உதவிகளை வழங்கி மனிதாபிமான செயற்பாடுகளைச் செய்து வருகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

டுபாய் நாட்டில் வாழும் பொறியியலாளர் வசீர் அவர்களுடைய நிதி உதவியின் மூலம் இந்த தண்ணீர் உதவி வழங்கப்படுகிறது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு பெரியளவிலான மதிப்பீடுகள் காட்டப்படும். ஆனால் தனியார் தொண்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டம் அதற்குரித்தான செலவீனங்களே காட்டப்படும். தனியார் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு  பயனாளிளுடைய பங்களிப்பு அதிகம் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

-இக்பால் அலி


No comments:

Post a Comment