இலங்கையில் அரசியல் ஒரு வியாபாராமாக மாறி விட்டதாக தெரிவிக்கும் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க, அதனை ஒழுங்குபடுத்த மக்கள் சக்திகள் ஒன்று பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மக்கள் சார் அரசியலை முன்னெடுப்பதற்கும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குமான போராட்டத்தில் தேசிய அளவில் மக்கள் சக்தியை ஒன்றுபடுத்தும் தேவையுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் சர்ச்சைகளின் போது ஜே.வி.பியின் தலையீட்டையும் கருத்துக்களையும் பாரிய அளவில் மக்கள் வரவேற்கின்ற போதிலும் தேர்தல்களின் போது வாக்களிப்பு வீதத்தில் வளர்ச்சி அவசியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment