புராதன முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள், பொருட்களை சேதப்படுத்தல் மற்றும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வோருக்கு எதிராக இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது தொல் பொருட் திணைக்களம்.
தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் எண்மர் அண்மையில் கிரலகலயின் நின்று படம் பிடித்ததன் பின்னணியில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் இவ்வாறான செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ள அதேவேளை புராதன சுற்றுலாத்தளங்களில் நிர்வாணமாக போட்டோ எடுப்பது மற்றும் அசிங்கப்படுத்துவது போன்ற செயற்பாடுகள் தொடர்கின்ற நிலையில் இவ்வறிவுப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட்தக்கது.
No comments:
Post a Comment