இசை நிகழ்ச்சியில் ஒன்றிணைந்த மைத்ரி - ரணில் - மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Friday, 11 January 2019

இசை நிகழ்ச்சியில் ஒன்றிணைந்த மைத்ரி - ரணில் - மஹிந்த!


எதிரும் புதிருமாக அரசியலில் காட்சியளிக்கும் இன்றைய அரசியல் பிரதானிகள் மூவர் நேற்றைய தினம் இசை நிகழ்ச்சியொன்றை ஒன்றாக அமர்ந்திருந்து கண்டு களித்துள்ளனர்.



பாத்திய - சந்தோஷ் இசைக்குழுவின் 20 வருட நிறைவையொட்டிய விசேட நிகழ்விலேயே ஜனாதிபதி - பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றாக அமர்ந்து கண்டு களித்துள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றில் சூடான விவாதங்கள் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறுகின்ற போதிலும் சபை அமர்வின் பின் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தோழமையுடனேயே உறவாடும் வழக்கம் உள்ளமையும் தமது பிரதிநிதிகளின் உரையை மாத்திரம் கேட்டு விட்டு ஆதரவாளர்களே கடும் போக்காளர்களாக தொண்டு செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment