இம்முறை இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை 3500 ஆக உயர்த்தியுள்ளதாக இம்மாதம் 14ம் திகதி அமைச்சர் ஹலீம் தகவல் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு தற்போது தானே முயற்சி செய்ததாக உரிமை கோரியுள்ளார் ஹிஸ்புல்லா.
இன்றைய தினம் அவர் அனுப்பி வைத்துள்ள தகவல் குறிப்பில் இரு வாரங்கள் தான் முஸ்லிம் விவகார அமைச்சராக இருந்த போது அதற்கான வேண்டுகோளை முன் வைத்ததாகவும் அது நிறைவேற்றப்பட்டுள்ளதை காத்தான்குடிக்கே வந்து இலங்கைக்கான சவுதி தூதர் தனக்கு உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தானே சவுதி சென்று அங்கு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி கோட்டாவை அதிகரித்துக் கொண்டதாக அமைச்சர் ஹலீம் ஜனவரி 14ம் திகதி தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கான இணைப்பு:
No comments:
Post a Comment