தான் விரைவில் கபினட் அந்தஸ்த்துள்ள அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பாலித ரங்கே பண்டார.
ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் போது கட்சி மாறி விலை போகாமல் தான் தியாகம் செய்த போதிலும் அதற்குரிய கௌரவம் வழங்கப்படவில்லையென பாலித தனது ஆதங்கத்தை வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போது தனக்கு அமைச்சுப் பதவி கிடைப்பது உறுதியென தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சரவையை அதிகரித்து மேலும் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ரணில் அரசு முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment