கடந்த வருடம் பெப்ரவரி 4ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து மரண அச்சுறுத்தல் விடுத்த இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்.
குறித்த நபர் ஐக்கிய இராச்சியத்தில் இல்லாது போனால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்படும் என்பதோடு ஐக்கிய இராச்சியத்துக்கான உயர்ஸ்தானிகர் நீதிமன்றுக்கு அழைக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தினத்தில் தமிழ் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே பெர்னான்டோ கழுத்தறுபடும் என சைகை காட்டியிருந்தார். அதன் பின்னணியிலேயே இவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment