முல்லைத்தீவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இடத்தில் பௌத்த விகாரையைக் கட்டியெழுப்புவதற்கு தற்காகலிகத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த 14ம் திகதி தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் அங்கு பொங்கல் கொண்டாட்டம் நிகழ்த்தப்பட்டதுடன் குறித்த பகுதி கோயிலுக்குச் சொந்தம் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த இடத்தில் புராதன காலத்திலிருந்தே விகாரையொன்று இருந்ததாகவும் யுத்த காலத்திலேயே அது சேதப்படுத்தப்பட்டு கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் பௌத்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த பகுதியின் 93 ஏக்கர் நிலம் விகாரைக்குச் சொந்தமானது என தொல்பொருட் திணைக்களம் 2013ம் ஆண்டு பதிந்துள்ளமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் நீதிபதி மேலதிக ஆவணங்கள் கோரியுள்ளார். உள்ளூர் அரசியல்வாதியொருவரே சர்ச்சையை உருவாக்குவதாக விகாரையின் தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment