இலங்கை இராணுவம் தொடர்பில் தமிழ் மக்களிடம் தப்பபிப்பிராயத்தைத் தோற்றுவிக்கும் வகையில் விக்ணேஸ்வரன் இனவாதம் பேசுவதாக தெரிவிக்கிறார் கருணா அம்மான்.
வடபுலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது இராணுவமே உடனடியாக களத்தில் இறங்கிப் பணியாற்றியதாகவும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கும் இராணுவம் இவ்வாறே உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கின்ற கருணா அம்மான், தமிழ் மக்கள் இராணுவத்தினர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, கிழக்கில் ஹிஸ்புல்லா ஆளுனராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருணா அம்மான் இனவாத கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment