அல்கயீதா மற்றும் ஐ.எஸ். அமைப்புகள் ஆப்கனிஸ்தானில் இயங்குவதங்கு இடமளிக்காமல் விடுவதற்கு பகரமாக ஆப்கன் மண்ணிலிருந்து வெளிநாட்டு படைகளை மீளப்பெறுவதற்கான நிபந்தனை அடிப்படையிலான தலிபான் - அமெரிக்கா இடையிலான பேச்சு சாதகமான நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டாரில் இரு தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளதாக அமெரிக்க மற்றும் ஆப்கன் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
தலிபானிடமிருந்து ஆப்கனிஸ்தானை விடுவிக்கப் போவதாகக் கூறி அங்கு வெளிநாட்டுப் படையினர் கடந்த 17 வருடங்களாக நிலை கொண்டுள்ள போதிலும் தலிபான் தொடர்ந்தும் தாக்குதல்களை நடாத்தி வருகிறது. இந்நிலையில் புதிய கோணங்களில் அல்கயீதா மற்றும் ஐ.எஸ் அபாயங்களும் சூழ்ந்துள்ளமையால் அங்கிருந்து தாம் விலகி உள் நாட்டிலேயே தீர்வைக் காண விட்டு ஒதுங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதன் பின்னணியில் இப்பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment