ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் ஜனாதிபதி - எ.கட்சி தலைவராக இருக்க முடியுமா? - sonakar.com

Post Top Ad

Friday 25 January 2019

ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் ஜனாதிபதி - எ.கட்சி தலைவராக இருக்க முடியுமா?


ஒரே கட்சியை சேர்ந்த இருவர் ஜனாதிபதியாகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியுமா என கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன்.


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கின்ற அதேவேளை அக்கட்சியை சேர்ந்தவர் என மீளுறுதி அளிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது எவ்வகையில் நியாயம் என இன்று நாடாளுமன்றில் சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அண்மையில் சபாநாயகர் அங்கீகரித்ததையடுத்து மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment