வடமாகாணம், சப்ரகமுவ மற்றும் ஊவா மாணாகங்களுக்கான புதிய ஆளுனர்களை நியமித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த சுரேன் ராகவன் வட மாகாண ஆளுனராகவும் பேராசிரியர் தம்ம திசாநாயக்க சப்ரகமுவ ஆளுனராகவும், கபே அமைப்பின் கீர்த்தி தென்னகோன் ஊவா மாகாண ஆளுனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென் மாகாணத்துக்கான ஆளுனர் பதவி பற்றிய அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment