மேல் மாகாண ஆளுனராகத் தன் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில் தனக்கு எந்தவித கட்சி பேதமோ, இன பேதங்களோ இல்லையென தெரிவிக்கிறார் ஆளுனர் அசாத் சாலி.
எந்தக் கட்சியினர் வேண்டுமானாலும் தனது அலுவலகத்துக்கு வர முடியும் எனவும் தன்னாலான சேவைகளை செய்யத் தயங்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ராஜகிரிய, பார்லிமன்ட் வீதியில் அமைந்துள்ள ஜனஜவிய கட்டிடத்தின் 8வது மாடியில் மேல் மாகாண ஆளுனருக்கான புதிய அலுவலகம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை இன்றைய தினம் சமய தலைவர்கள், அரசயில் பிரமுகர்கள் உட்பட பெருந்திரளானோர் சமூகமளித்திருந்த நிகழ்வில் வைத்து தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக அசாத் சாலி பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment