தன்னை ஜனநாயக வீரனாகக் காட்டிக் கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் நான்காவது சக்தியான ஊடக சக்தியை முடக்க முயல்வதிலிருந்து அவர் பேசுவது போலி ஜனநாயகம் என அம்பலமாகி விட்டதாக தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ரோஹன பியதாச.
கம்பஹாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக செயலமர்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், நாட்டின் ஊடகங்களை கருப்பு - வெள்ளையென பிரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லையென தெரிவிக்கிறார்.
பிரதான ஊடகங்கள் அரசுக்கு எதிரான விடயங்களை மாத்திரமே வெளிக்கொண்டு வருவதாகவும் திட்டமிட்டு மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ந்தும் குற்றச்சாட்டு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment