தனது சோதிடர் சுமனதாசவுக்கு கார் ஒன்றைப் பரிசளித்து அதன் செலவை மிஹின் லங்காவின் கணக்கில் மஹிந்த சேர்த்திருந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போதே மஹிந்தவின் சோதிடர் நேற்றைய தினம் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளமையும் மஹிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறு பலருக்கு வாகனங்களை பரிசளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment