யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்று பாடசாலையினுள் உள்வாங்கும் வகையில் கால்கோள் விழா மிக விமர்சையாக நேற்று (17) ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் அதிபர் திரு சேகு ராஜிது தலைமையில் காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழப்பாணம் பிரதேச செயலாளர் உயர்திரு.பொ.தயானந்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாநகரசபை உறுப்பினர்களான ஜனாப் எம்.எம்.எம். நிபாஹிர் மற்றும் கே.எம். நிலாம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த பிரதேச செயலரின் சேவைகளைப் பாராட்டி நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டமையும் விசேட அம்சமாகும்.
நிகழ்வின் போது வடக்குமாகாண ஆளுநர் கௌரவ சுரேன் ராகவன் அவர்கள் எவருமே எதிர்பாராத சமயம் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்ததுடன், சிறப்புரை ஒன்றையும் ஆற்றிச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பாடசாலையின் அமைப்புக்கள் (SDS, SDC, OBA), யாழ் வலயக் கல்வி அலுவலகப் பிரதிநிதிகள், தரம் 1 மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், உலமாக்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
- என்.எம்.அப்துல்லாஹ்
No comments:
Post a Comment