முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சிகள் 18 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 49 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கோட்டாபே மற்றும் அவரது சகாக்கள் ஆறுபேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் விசேட உயர் நீதிமன்றில் குறித்த வழக்கு தினசரி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபன ஊழியர்கள் 18 பேருக்கு நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment