மஹிந்த ராஜபக்ச, தான் எந்தக் கட்சியென்பதை சொல்ல வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்தால் வேறு கட்சிகளின் செயற்பாடுகளில் கலந்து கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கிறார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.
2015 ஜனாதிபதி தேர்தலின் பின் மைத்ரி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இயங்கிய போதிலும் மஹிந்த தரப்பு தனி அணியாகவே இயங்கி வருவதுடன் தனியாகவே மே தின நிகழ்வுகளையும் நடாத்தியுள்ளது. பல தடவைகள் மஹிந்த தரப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக சு.க தெரிவித்த போதிலும் ஈற்றில் பினாமி தலைவர் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தோற்றுவித்து, 2018 நவம்பரின் பிரதமர் பதவியை நம்பி தனது கட்சியில் மஹிந்த உறுப்புரிமையையும் பெற்றுக் கொண்டார்.
எனினும், கட்சி மாறினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டும் நீங்க வேண்டும் என்பதால் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள மஹிந்த பெரமுன நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதிலும் தான் சுதந்திரக் கட்சியை விட்டு விலக வில்லையெனவே தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment